கேன்ஸ் பட விழாவில் மாஸ் என்ட்ரி..இந்தியா சார்பாக கலக்கிய பூஜா ஹெக்டே! செம HOT போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் (17.05.2022) அன்று தொடங்கி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | CANNES பட விழாவில் குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய்.. சிவப்பு கம்பள வரவேற்பில் அசத்திய செமயான PHOTOS!

இந்த விழாவில், இந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், திரையிடப்படவுள்ளது. அதே போல, பல நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியாவின் சார்பில், பா.ரஞ்சித், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், பார்த்திபன், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், அனேகா, அதிதீ ராவ் ஹைத்ரி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 'லி மஸ்க்' திரைப்படம், மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படம், கமல் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரெய்லர் ஆகியவை, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, நான் லீனியர் திரைக்கதையில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான இரவின் நிழல் திரையிடப்பட உள்ளது.

கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் நடிகை தமன்னாவும் இடம்பெற்றுள்ளார். இப்பிரதிநிதிகள் குழுவில் ஏஆர் ரஹ்மான், பூஜா ஹெக்டே, நவாசுதீன் சித்திக், ஆர். மாதவன் மற்றும் சேகர் கபூர் உள்ளிட்டோர் உள்ளனர்.

பூஜா ஹெக்டே பட விழாவில் ஒரு ஆஃப் ஷோல்டர் லோ நெக் டிரஸ்ஸுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். வெண்ணிற ஆடை அணிந்திருந்த பூஜா ஹெக்டே இந்நிகழ்வில் டாம் குரூசின் மாவ்ரிக் படத்தை கண்டு ரசித்தார். மேலும் அவர் மே 20 ஆம் தேதி வரை, பட விழாவில் கலந்து கொள்வார்.  மே 28 ஆம் தேதி வரை கேன்ஸ் பட விழா நடைபெறுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde at Cannes Film Festival Red Carpet images

People looking for online information on Cannes 2022, Cannes Film Festival, Cannes Film Festival Red Carpet, Pooja Hegde will find this news story useful.