வீட்ல விஷேசம்.. ஆனந்த கண்ணீரில் நடிகை பூஜா ஹெக்டே! அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே, தனது அண்ணன் திருமண நிகழ்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "பருத்திவீரன்-னால பணமும் வரல.. சந்தோஷமும் வரல" - உடைக்கும் Bigg Boss சரவணன்  

2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 22 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே,  வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்", தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படம் என பல படங்களை பூஜா ஹெக்டே கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, தனது அண்ணன் திருமண நிகழ்வு குறித்து பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என் அண்ணன் தன் உயிரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்! இந்த நிகழ்வு ஒரு வார ரோலர்கோஸ்டர் ரைடு! ஆனந்தக் கண்ணீருடன் அழுதிருக்கிறேன், குழந்தையைப் போல சிரித்திருக்கிறேன்.

அண்ணா, உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது, ​​நீங்கள் அளவுகடந்து நேசிப்பீர்கள், உங்களை முழு மனதுடன் ஒப்படையுங்கள் & ஒருவருக்கொருவர் இடையே அமைதி மற்றும் புரிதலைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். ஷிவானி, அழகான அற்புதமான மணமகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்". என பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.

Also Read |  'AK62' படத்தின் லேட்டஸ்ட்டா வந்த அப்டேட்.. டிவிட்டரில் லைக் செய்த விக்னேஷ் சிவன்! செம வைரல்

வீட்ல விஷேசம்.. ஆனந்த கண்ணீரில் நடிகை பூஜா ஹெக்டே! அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde about Her Brother Marriage Event

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde Brother Marriage Event will find this news story useful.