ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளியான PS1 பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்! புது வெள்ளம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இவர் தான் உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவர்! LYCA வெளியிட்ட PS1 பொன்னியின் செல்வன் படத்தின் BTS!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் புதிய வந்தியத்தேவன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதை ஆடிப்பெருக்கு விழாவில் தான் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Also Read | பெங்களூர் பழைய புத்தக கடையில்.. 1950-ல் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பிரதிகள்.!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Vanthiyathevan Aadi Festival Poster

People looking for online information on ManiRa, Maniratnam, Ponniyin Selvan, PS1, PS1 Vanthiyathevan Aadi Festival Poster will find this news story useful.