PONNIYIN SELVAN: "LOCATION அனுப்புங்க இளவரசி.." கார்த்தி ட்வீட்.. த்ரிஷாவின் செம பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை வைத்து, பிரபல இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இதன் முதல் பாகமான PS-1, வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

PS-1 டீசர் அப்டேட்

இதில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோரின் லுக் மற்றும் கதாபாத்திரத்துடன் கூடிய போஸ்டர்கள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தாரணி கலை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் இன்று வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் PS-1 படத்தின் டீசரை ஹிந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும், தமிழில் நடிகர் சூர்யாவும் நாளை (08.07.2022) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

கார்த்தி போட்ட ட்வீட்

இதனிடையே, இன்று நடிகை த்ரிஷாவின் 'குந்தவை' கதாபாத்திரத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியாகிய போது, அதற்கு கார்த்தி கொடுத்த ரியாக்ஷனும் பதிலுக்கு த்ரிஷா கொடுத்த பதிலும் ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது.

த்ரிஷாவின் போஸ்டரை டிவிட்டரில் மறுட்வீட் செய்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார். அதில், "இளவரசி😁😁😁😁 Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!" என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலானது.

த்ரிஷா கொடுத்த 'Reply'

தொடர்ந்து, இதனை கவனித்த நடிகை த்ரிஷா, "Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed" என ஜாலியாக பதில் தெரிவித்துள்ளார். வந்தியத்தேவன் கார்த்தியும், குந்தவை த்ரிஷாவும் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் போல உரையாடிக் கொண்ட பதிவு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan trisha reply for karthi on her poster

People looking for online information on AR Rahman, Karthi, Maniratnam, Ponniyin Selvan 1, PS-1 Teaser, Trisha will find this news story useful.