நடிகை த்ரிஷா, தனது காலில் ஏற்பட்ட காயம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Also Read | மணிரத்னம் வீட்டுக்கு சென்ற கமல்ஹாசன்.. எல்லா சொந்தகாரங்களும் இங்கே தான் இருக்காங்க!
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை த்ரிஷா.
சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழில் நடிகை த்ரிஷா, 'தி ரோடு' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பல மாதம் முன்பே வந்தது. திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.
சமீபத்தில் த்ரிஷா இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீங்கிய தனது காலை புகைப்படம் எடுத்து, "உங்களுடைய காலில் காயம் இருந்தால் உங்கள் பட வெற்றி விழாவில் நடனம் ஆட முடியாது". என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா நடந்தது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
Also Read | ஜப்பானிலும் மாஸ் காட்டும் 'RRR'.. மூன்றே வாரத்தில் இத்தனை கோடி வசூலா! முழு விவரம்