பிரபல தியேட்டரில் PS1 நடிகர்களுடன் படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்.. கூட இவங்க வேற இருக்காங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | குட் நியூஸ் சொன்ன சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில் - ஸ்ரீஜா..! வாழ்த்தும் ரசிகர்கள்

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் இந்த கனவு, இயக்குனர் மணிரத்னத்தால் தற்போது நிறைவேறவும் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் 1 படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தினை சென்னையில் உள்ள பிரபல சத்யம் திரையரங்கில் சிறப்பு திரையிடலில் கண்டு களித்தனர். இந்த திரையிடல் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம், சுஹாசினி, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா ஆகியோரும் படத்தை கண்டு ரசித்தனர்.

Also Read | "ராஜராஜ சோழன்.. திருவள்ளுவர்... என தொடர்ந்து நம் அடையாளங்கள்..." - வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு!

Ponniyin Selvan team watching the movie at Sathyam Cinemas

People looking for online information on Ponniyin Selvan part 1, Ponniyin Selvan team, Sathyam cinemas will find this news story useful.