PS2: பொன்னியின் செல்வன் - 2 படத்தின் ரிலீஸ் தேதி.. GLIMPSE வீடியோவுடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் விஷ்ணு விஷால் நடிப்பில் ஹிட்டான "கட்டா குஸ்தி".. ரிலீஸ் எப்போ?

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது.  3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நடுவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என குறு முன்னோட்டம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | சீரியல் நடிகை ப்ரீத்தியை கரம்பிடிக்கும் 'பசங்க' பட இளம் நடிகர் – வைரலாகும் Post!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS2 Release Date Announced

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan, Ponniyin Selvan PS2 updates, PS 2 will find this news story useful.