சோழப் பேரரசின் சிம்மாசனத்துக்கான போர்.. PS2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? செம்ம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2, படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சுப்ரமணியம் Uncle போல அக்கறையான ஒருவரை".. அஜித் தந்தை குறித்து சியான் விக்ரம் உருக்கம்!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார்.

ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு போஸ்டரில் விக்ரம் & ஐஸ்வர்யா ராய் இடம் பெற்றுள்ளனர்.

Also Read | "பெற்றோர் மீது பேரன்பு கொண்டவர் AK".. அஜித் தந்தையின் மறைவுக்கு விக்னேஷ் சிவன் இரங்கல்!

Ponniyin Selvan PS2 Movie Trailer Release Date Update

People looking for online information on Ponniyin Selvan Part 2, Ponniyin Selvan PS2 Movie Trailer will find this news story useful.