PS2: வந்தியத் தேவன் லுக்கிற்கு கார்த்தி மாறிய விதம்.. வைரலாகும் பொன்னியின் செல்வன் MAKING VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தின் மேக் ஓவர் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் -2 படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் அதற்குரிய திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின் பிரதான கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியின் லுக் மேக் ஓவர் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.  மேலும் அக நக எனும் முதல் சிங்கிள் பாடலின் காட்சித் துணுக்கும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.  வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS2 Karthi transformation Vandhiya Thevan

People looking for online information on Karthi, Ponniyin Selvan, PS2 will find this news story useful.