இந்தா வந்துருச்சுல.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'பொன்னியின் செல்வன்'.. டைம் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தளபதி விஜய்-யுடன் பிரபல நடிகர்.. வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் BTS.. சூப்பர் ஃபோட்டோ!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது.  3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த பொன்னியின் செல்வன் -1 படம் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.01.2023) அன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

Also Read | Nani30: செம Combo! நானியுடன் முதல்முறை கைகோர்க்கும் முன்னணி ஹீரோயின்!!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 World Television Premiere on Sun TV

People looking for online information on Ponniyin Selvan, PS1 Television Premiere, Sun TV will find this news story useful.