இயக்குனர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
Also Read | 'வெந்து தணிந்தது காடு'.. வெளியான சென்னை & செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் லிஸ்ட்!
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியானது. நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சீயான் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!" என கூறியுள்ளார். மேலும் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி & த்ரிஷாவை டேக் செய்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த வந்தியத்தேவன் கார்த்தி, "இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me" என பதில் அளித்தார். இதற்கு பதில் அளித்த ஆதித்த கரிகாலன், "சரி தான்.இளைப்பாறு நண்பா. Detox. Rest. Recuperate.
சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். See you on the other side வந்தியத்தேவா" என சியான் விக்ரம் கூறினார். பின்னர் மீண்டும் வந்தியத்தேவன் கார்த்தி, "என்னுடைய பாதுகாப்பு இல்லாமல் உங்களை எங்கும் அனுப்ப முடியாது இளவரசே. அலுப்பாய் இருந்தாலும் நானும் வந்தே தீருவேன்.🤗🤗" என ட்வீட் செய்ய இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல் "அருண் மொழி வர்மன்" ஜெயம் ரவி, "தம்பிவுடையான் படைக்கு அஞ்சான் ⚔️இதோ நானும் வந்தியதேவனுடன் வந்து விடுகிறேன் 🐎, என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது ❤️" என ட்வீட் செய்துள்ளார்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Also Read | VTK: வெந்து தணிந்தது காடு.. கௌதம் மேனன் & சிம்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சூர்யா! சூப்பர்ல