முதலிடத்தில் 'பொன்னியின் செல்வன்' .. ஒட்டுமொத்த தமிழக வசூல் நிலவரம்! இத்தனை கோடியா?! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன்-1 படத்தின் மொத்த தமிழக வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர்.

பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில்  முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. மேலும் பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று 25வது நாளை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 270 திரையரங்க திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுவரை தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. பங்குத் தொகையாக மட்டும் 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் லாபகரமான படங்களில் ஒன்றாக பொன்னியின் செல்வன் படம், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு அமைந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Tamilnadu Box Office Collection 200 Cr

People looking for online information on Ponniyin Selvan Box Office, Ponniyin Selvan Tamil Nadu Box Office, PS1 will find this news story useful.