த்ரிஷா & ஷோபிதா அசத்தல் நடனம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த LYRIC VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் சொல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இமயமலையில் பைக் ரிப்பேர்.. உதவி கேட்ட நபர்.. மெக்கானிக்காக மாறிய நடிகர் அஜித்! ருசிகர சம்பவம்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தின்  அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்களும் வெளியாகி உள்ளன.

இதில் சொல் பாடலை ரக்ஸிதா சுரேஷ் பாடியுள்ளார். கிரித்திகா நெல்சன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த சொல் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. த்ரிஷா & ஷோபிதா துலிபாலா ஆகியோர் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

Also Read | பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராஷ்மிகா மந்தனா.. 16 வகை உணவுகளுடன் வேறலெவல் விருந்து!

த்ரிஷா & ஷோபிதா அசத்தல் நடனம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த LYRIC VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Sol Lyrical Video Trisha

People looking for online information on Ponniyin Selvan part 1, Ponniyin Selvan Sol Lyrical Video, Sobhita Dhulipala, Trisha Krishnan will find this news story useful.