பொன்னியின் செல்வன்-1 படத்தில் இடம் பெறாத சொல் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

Also Read | விக்ரம் நடிக்கும் "தங்கலான்".. பா. ரஞ்சித் பிறந்தநாளில் வெளியான புதிய BTS போஸ்டர்!
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெறாத சொல் பாடலின் முழு வீடியோ வெளியாகி உள்ளது.
Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain), ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) , அலை கடல் (Angst) என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.
இதில் சொல் பாடலை ரக்ஸிதா சுரேஷ் பாடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிரித்திகா நெல்சன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த சொல் பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. த்ரிஷா & ஷோபிதா துலிபாலா ஆகியோர் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
Also Read | "மிஸ் பண்றேன்" 😍.. மும்பையின் பிரபல உணவகத்தில் இருந்து விக்னேஷ் சிவன்!