"பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் BTS வீடியோவை லைக்கா நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. எழுத்தாளர் ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், வரலாற்று ஆசிரியர் ராமசந்திரன், கலாச்சார ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் சோழப்பேரரசு பற்றி பேசியுள்ளனர்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட டிப்ஸ் (TIPS) நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.