PS1: பிரபலTV சேனலில் PONNIYIN SELVAN இசை வெளியீட்டு விழா.. எதுல? சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | த்ரிஷா & ஷோபிதா அசத்தல் நடனம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த LYRIC VIDEO!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும்  நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைத்ரி என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழா & டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோ தற்போது சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | செல்வராகவன் நடிக்கும் பகாசூரன்.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Movie Audio Launch at Sun TV

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan part 1, PS1 Movie Audio Launch, Sun TV will find this news story useful.