PS1: வெளியான 'சோழா சோழா' பாடல் வீடியோ.. விக்ரமின் தெறி மாஸ் PERFORMANCE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் 'சோழா சோழா' பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? செம்ம

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.  தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது.  3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படம் தற்போது வரை 400+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சோழா சோழா பாடல் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. விக்ரமின் நடனத்துடன் வெளியான இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

 

Also Read | "என் அப்பா, அம்மாக்கு அப்புறம் இப்டி பண்ணது நீங்க தான்".. உருகிய ஜிபி முத்து!!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Chola Chola Song Video Released

People looking for online information on Ponniyin Selvan 1, PS1 Chola Chola Song, Vikram will find this news story useful.