பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் உருவான விதம் குறித்து அப்படத்தின் போஸ்டர் டிசைனர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read | வாரிசு படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? ரசிகர்களை சந்தித்த விஜய்! வைரல் வீடியோ
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தினை இரு பாகங்களாக இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இது தொடர்பான கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டர்கள் மற்றும் படத்தின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த போஸ்டர்களை வடிவமைப்பு செய்தவர் பிரபல டிசைனர் கோபி பிரசன்னா ஆவார். இவர் வாரிசு & துணிவு படங்களின் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் உருவான விதம் குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
கோட்டோவியமாக இருந்து 4 படிநிலைகளில் தற்போது இருக்கும் போஸ்டர் எப்படி உருவானது என்பதை விளக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் ஃபோட்டோகிராபர் பாலு, வடிவமைப்பாளர் உதயம், ஹைபிரிட் ஸ்டூடியோவுக்கும் கோபி நன்றி தெரிவித்துள்ளார்.
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Also Read | போடு.! பிரபல தமிழ் TV சேனலில் ஒளிபரப்பாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'... எப்போ? எதுல?