பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலை ரஹ்மான் அமெரிக்க இசை கச்சேரியில் பாடிய முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
Also Read | "Bat, ball வெச்சு விளையாடணும்.." கிரிக்கெட் வீரரை குறிப்பிட்டு 'The Legend' பட ஹீரோயின் பரபரப்பு பதிவு?
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹாஸ்டன் நகரில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை கச்சேரியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் "பொன்னி நதி" பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோவையும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Also Read | பிரபல போட்டோகிராபருடன் இணைந்து நடிகை ஸ்ருதி ஹாசன் ஃபேஷன் போட்டோஷூட்! வைரல் ஃபோட்டோஸ்