PS1: பொன்னியின் செல்வன் படத்தின் மூன்று வார மொத்த வசூல்.. தெறி மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன்-1 படத்தின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல'.. ஷூட்டிங் இந்த ஊர்ல தான்! வைரலாகும் மாஸ் BTS

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். இது வரை தமிழகம் முழுவதும் 100+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்.. ரிலீஸ் எப்போ? ஜெயம் ரவி சொன்ன சூப்பர் தகவல்!

Ponniyin Selvan Part1 PS1 Box Office Collection Crossed 450 crore

People looking for online information on பொன்னியின் செல்வன், Ponniyin Selvan 1, PS1 Box Office Collection will find this news story useful.