"பட்டத்து இளவரசர MISS பண்ணீங்களா?.." விக்ரம் போஸ்டருடன் வெளியான பொன்னியின் செல்வன் UPDATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இதன் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

மேலும் இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தாரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். இவர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, டீசர் வெளியீட்டு விழாவும், கடந்த ஜூலை 08 ஆம் தேதியன்று, சென்னையின் Trade Centre-ல் வைத்து நடைபெற்றிருந்தது.

மிகவும் பிரபலமான நாவல், திரை வடிவில் வருவதால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்த பலரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரைக் கண்டு பிரமிப்பில் உள்ளனர். மேலும், படம் ரிலீஸ் ஆகும் நாளையும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் டீசர் விழாவில், இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த டீசர் விழாவில், உடல்நிலை காரணமாக நடிகர் விக்ரம் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பொன்னியின் செல்வன் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விக்ரம் இருக்கும் போஸ்டர் ஒன்றை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ள நிலையில், "Our Chola Tiger" என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தங்களின் கேப்ஷனில், "பட்டத்து இளவரசரை நிகழ்ச்சியில் மிஸ் செய்தீர்களா?. உங்களுக்காக எங்களிடம் இருந்து ஸ்பெஷல் ஒன்று வருகிறது" என குறிப்பிட்டு, நாளை 5 மணிக்கு அப்டேட் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். விக்ரம் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவர் தொடர்பாக சர்ப்ரைஸாக ஏதேனும் அப்டேட்கள் நாளை (13.07.2022) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan new update about chiyan vikram

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan, PS 1, Vikram will find this news story useful.