ஏ‌.ஆர். ரஹ்மான் இசையில் ரிலீசான 'பொன்னியின் செல்வன்' படத்தின் 6 பாடல்கள்.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | 3:33 லக்கி நம்பரா? ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு ரஜினிகாந்த் & கமல்ஹாசன் வருகை தர உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்கள் வெளியாகி உள்ளன.

ராட்சஸ மாமனே பாடலை ரஹ்மான் உடன் இணைந்து ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தேவராளன் ஆட்டம் பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். சொல் பாடலை ரக்ஸிதா சுரேஷ் பாடியுள்ளார். அலை கடல் பாடலை அந்தாரா நந்தி பாடியுள்ளார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Also Read | விக்ரம் நடிப்பில் 'கோப்ரா-2' வருமா? பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Songs Released PS1 AR Rahman

People looking for online information on AR Rahman, Maniratnam, Ponniyin Selvan Movie Songs Release, Ponniyin Selvan part 1 will find this news story useful.