பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. கார்த்தி தோன்றும் தெறியான BTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய BTS வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல போட்டோகிராபருடன் இணைந்து வண்ணமயமான போட்டோ ஷூட்..‌ வைரலாகும் திவ்யபாரதியின் LATEST PHOTOS!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை முன்னிட்டு படக்குழு படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. பொன்னி நதி பாடல் உருவாக்கப்பட்ட விதமும் அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் நடிகர் கார்த்தி மற்றும் நடன இயக்குனர் பிருந்தா விளக்குவதும் இந்த BTS வீடியோவில் இடம்பெற்றுள்ளது. பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியில் இந்த பாடல் காட்சிகள் சில படமாக்கப்பட்டன.

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Also Read | 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ!

பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. கார்த்தி தோன்றும் தெறியான BTS வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Ponni Nadhi Song Making BTS

People looking for online information on Karthi, Ponniyin Selvan, Ponniyin Selvan Movie Ponni Nadhi Song will find this news story useful.