பொன்னியின் செல்வன் படத்தின் திரையரங்க கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் நாளை மறுநாள் வெளியாவதையொட்டி டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகின்றன. பொன்னியின் செல்வன் படம், IMAX 3டி வடிவத்திலும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இந்த படத்தின் டிக்கெட் விலை, ஐமேக்ஸ் வடிவத்தில் 459 ரூபாய் ஆகவும், சாதாரண வடிவத்தில் 190 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மதுரையில் ஒரு டிக்கெட் விலை 190 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. கொச்சி நகரில் 120 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஐத்ராபாத் நகரில் ஒரு டிக்கெட் விலை 350 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பெங்களூர் நகரில் ஒரு டிக்கெட் விலை 1400, 1200, 1000, 350, 236, 150 என திரையரங்குகளுக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.