PONNIYIN SELVAN PS1: ஸ்ரேயா கோஷல் குரலில் அடுத்த சிங்கிள் பாடல் எப்போ ரிலீஸ்? A.R.ரஹ்மான் சொன்ன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன.‌ பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் டிவிட்டரில் ஒரு ரசிகர் ரஹ்மானிடம், "கிங் ரஹ்மான் சார், ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் படத்தின்  பாடலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்கள்" என கேட்டார். அதற்கு பதில் அளித்த ரஹ்மான், "செப்டம்பர் முதல் வாரம் வரை பொறுத்திருங்கள்" என பதில் அளித்துள்ளார்.

இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Next Song Update from AR Rahman

People looking for online information on A R Rahman, Ponniyin Selvan, PS1, Shreya Ghoshal will find this news story useful.