அசத்தலான புதிய ஆக்சன் காட்சிகளுடன் 'பொன்னியின் செல்வன்'.. வெளியான சூப்பர் GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'உடுமலை' கெளசல்யாவின் புதிய கடை.. திறந்து வைத்த பிரபல முன்னணி ஹீரோயின்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  வரும் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தின்  அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்களும் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புதிய காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஆதித்த கரிகாலன் விக்ரம், வந்தியத்தேவன் கார்த்தி,  அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி ஆகியோர் ஒரே பிரேமில் தோன்றும் காட்சியுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது.

Also Read | நடிகர் அஜித்தின் 'ஆரம்பம்' & 'துணிவு' லுக்.. வைரலாகும் விக்னேஷ் சிவன் பகிர்ந்த PHOTO!

அசத்தலான புதிய ஆக்சன் காட்சிகளுடன் 'பொன்னியின் செல்வன்'.. வெளியான சூப்பர் GLIMPSE வீடியோ! வீடியோ

Ponniyin Selvan Movie New Glimpse Video With Countdown

People looking for online information on Ponniyin Selvan New Glimpse Video, Ponniyin Selvan part 1 will find this news story useful.