PS1: "பொன்னியின் செல்வன்".. வெளியான மற்றொரு வில்லனின் தெறி லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | தனுஷ் & செல்வராகவன்.. 'நானே வருவேன்' Shooting Spot-ல.. வைரலாகும் BTS.. செம அப்டேட்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் நாளை செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான இசை & டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ரஹ்மான் நடிக்கும் மதுராந்தகன் கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டருடன் சுந்தர சோழர் மற்றும் செம்பியன் மாதேவி கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

மதுராந்தகன் கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் புதினத்தில் நந்தினி கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக எதிர்மறை தன்மை கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | Natchathiram Nagargiradhu: "இது உங்க பெஸ்ட்.." - ‘நட்சத்திரம் நகர்கிறது’ பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டு.!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Madhurandakan Character Look Poster Released

People looking for online information on பொன்னியின் செல்வன், Madhurandakan Character Look Poster, Maniratnam, Ponniyin Selvan part 1 will find this news story useful.