பிரபல நடிகர் வெளியிட்ட PONNIYIN SELVAN படத்தின் BTS போட்டோ.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் BTS புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' தமிழக ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி தயாரிப்பாளர்!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் ஜெயராம், பொன்னியின் செல்வன் படத்தின் BTSபுகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் & ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் உடன் உள்ளார். மேலும் இந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம், ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார். நம்பி, சோழ நாட்டின் அமைச்சர் அநிருத்த பிரம்மராயரின் ஒற்றன் ஆவார். நந்தினியின் சகோதரரும் நம்பி பாத்திரம் தான்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பற்றி தமது இன்ஸ்டாகிராமில், "மணி ரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பலநாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது. நம்பி கதாபாத்திரம் இதயத்திற்கு நெருக்கமானது. முதல் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் வளர்ச்சியை காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது. " என நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

Also Read | AR ரஹ்மான் இசையில் விக்ரம் நடிச்ச கோப்ரா படத்தோட Songs.. ரெடி ஆன LIST..!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Latest BTS Image from Jayaram Mani Ratnam Ravi Varman

People looking for online information on Jayaram, Maniratnam, Ponniyin Selvan, PS1, Ravi Varman will find this news story useful.