பொன்னியின் செல்வன் படத்தின் பயன்படுத்திய நகைகள் குறித்த புதிய BTS வீடியோ வெளியாகி உள்ளது.
Also Read | முதல்முறையாக பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "எதற்கும் துணிந்தவன்".. எப்போ? எதுல?
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய BTS வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பயன்படுத்திய அத்தனை நகைகளும் தங்கத்தால் ஆனவை என அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. "மின்னும் அனைத்தும் பொன்" என குறிப்பிட்டு புதிய BTS வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த நகைகள் அனைத்தும் கிஷண் தாஸ் & கோ நிறுவனம் செய்தவை. தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத் நகரை தலைமையகமாக கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.
Also Read | தனியே தன்னந்தனியே.. லண்டனில் உள்ள பூங்காவில் பிரியங்கா மோகன்.. செம வைரலாகும் Throwback போட்டோஸ்!