PONNIYIN SELVAN PS1: உலக 'நாயகன்' கமல்ஹாசன் & 'தளபதி' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பு.. வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & உலக நாயகன் கமல்ஹாசன் சந்திப்பு நடந்துள்ளது‌.

Advertising
>
Advertising

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி) நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு ரஜினிகாந்த் & கமல்ஹாசன் வருகை தந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை லைக்கா நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா அருகில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அமர்ந்துள்ள நிலையில் புகைப்படம் அமைந்துள்ளது.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Event Rajinikanth Kamal Haasan Meet

People looking for online information on Kamal Haasan, Lyca, Ponniyin Selvan part 1, Ponniyin Selvan Trailer, PS1, Rajinikanth will find this news story useful.