PS1 PONNIYIN SELVAN: ஆதித்த கரிகாலனின் மிரட்டலான லுக்.. பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் ரீமேக்.. டீசர் ரிலீஸ் எப்போ? போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்!

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் 'சோழா சோழா' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் விக்ரம் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. போர் பின்னணியில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Also Read | திருச்சிற்றம்பலம் படத்தின் FDFS.. ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ் & அனிருத்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Adiththa Karikalan Vikram New Poster

People looking for online information on Ponniyin Selvan Movie Adiththa Karikalan, Ponniyin Selvan part 1, Vikram, Vikram Adiththa Karikalan New Poster will find this news story useful.