பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. லைகா வெளியிட்ட விக்ரமின் தெறி மாஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

Also Read | நான்கு மொழிகளில் வெளியாகும் பிசாசு-2.. ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான சூப்பர் அப்டேட்!

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் காட்சிகளுக்கு நடிகர் விக்ரம்  டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரம் தனது சொந்த குரலில் அனைத்து மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

Also Read | 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் "அரபிக்குத்து" டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே! சும்மா தீ ஆட்டம் இது.

பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. லைகா வெளியிட்ட விக்ரமின் தெறி மாஸ் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Actor Vikram Dubbing Video

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan, PS1, Vikram, Vikram Dubbing Video will find this news story useful.