பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம் கதாபாத்திரம் இதுவா? செம்ம கேரக்டர் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஜெயராம் கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸாகி உள்ளது.

Ponniyin Selvan Movie Actor Jayaram Character Look Poster
Advertising
>
Advertising

Also Read | சுந்தர் C இயக்கும் 'Coffee with காதல்'.. ரிலீஸ் எப்போ? தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் நடிகர் ஜெயராம் கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் இந்த படத்தில் ஜெயராம் நடித்துள்ளார்.

சோழ பேரரசின் முதலமைச்சர் அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் கதாபாத்திரமாக ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் இருக்கும் .  பழுவூர் இளையராணி நந்தினி தேவியை (ஐஸ்வர்யா ராய்) வளர்த்த சகோதரராகவும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் இருக்கும்.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து பிரபல OTT நிறுவனமான டென்ட்கொட்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

Also Read | ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகான் நடிக்கும் "விக்ரம் வேதா".. TRAILER ரிலீஸ் எப்போ? புது போஸ்டர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Actor Jayaram Character Look Poster

People looking for online information on Jayaram, Jayaram Character Look Poster, Maniratnam, Ponniyin Selvan Movie Actor Jayaram, Ponniyin Selvan part 1 will find this news story useful.