பொன்னியின் செல்வன் படத்துல இந்த ரோல்ல தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்க... வெளியான புது தகவல்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியன் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

இதில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார், இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

றெக்க, மாரி 2, சேதுபதி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் ராகவன் முருகன் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட பதிவில்,  நடிகை ஐஸ்வர்யா ராயுடன் சில செல்ஃபிக்களைப் பகிர்ந்துள்ளார்.

 

அது மட்டுமல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும், ராகவன் பாண்டிய இளவரசரின் இளம் வயதினராகவும் நடிக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan movie actor confirms aishwarya rai role

People looking for online information on A. R. Rahman, Aishwarya rai, Karthi, Mani Ratnam, Ponniyin Selvan, Vikram will find this news story useful.