பொன்னியின் செல்வன் மேக்கிங்.. கேமராவுடன் தடுமாறிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Ponniyin Selvan Making cinematographer shares a Video
Advertising
>
Advertising

Also Read | ஹன்சிகா நடிக்கும் புதிய படம்.. பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு.. முழு விபரம்..!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகியது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இது வரை தமிழகம் முழுவதும் 100+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், கையில் கேமராவுடன் நடிகர் ஜெயம் ரவிக்கு பின்னால் அதிவேகத்துடன் செல்லும் ரவிவர்மன், கால் இடறி விழப்போகிறார். அப்போது, அவரது உதவியாளர் ஒருவர் கேமராவை தாங்கிப் பிடிக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் வீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | போடு தகிட தகிட.. மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அனிருத்.. ஹீரோ ஹீரோயின் இவங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Making cinematographer shares a Video

People looking for online information on Cinematographer, Ponniyin Selvan 1, Ponniyin Selvan Making, Ravi Varman will find this news story useful.