பொன்னியின் செல்வன் படத்தின் த்ரிஷா போஸ்டர்.. வந்தியத்தேவன் கார்த்தி போட்ட வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

Also Read | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்.. வெளியான த்ரிஷாவின் கேரக்டர் லுக் போஸ்டர்!

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இந்த PS1 படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நேற்று முன்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தியின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியானது. அதற்கு முன் விக்ரம் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. நேற்று நடிகை ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இன்று நடிகை த்ரிஷாவின்  'குந்தவை' கதாபாத்திரத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை டிவிட்டரில் மறுட்வீட் செய்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார். அதில், "இளவரசி😁😁😁😁
Please send me live location,
உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!" என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  வந்தியத்தேவன் கார்த்தியின் காதலியாக குந்தவை த்ரிஷா நடிக்கிறார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Also Read | பொன்னியின் செல்வன் போர்க் காட்சிகள்.. இந்த ஊர்ல தான் எடுத்தாங்களாம்! மணிரத்னம் சொன்ன தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Karthi Tweet about Trisha Poster

People looking for online information on Karthi, Karthi Tweet about Trisha Poster, Maniratnam, Ponniyin Selvan will find this news story useful.