PONNIYIN SELVAN ரிலீஸ்க்கு முன்பே படம் பார்த்தாரா பிரபல நடிகரின் மனைவி? அவரே வெளியிட்ட POST.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'.. தாறுமாறான சென்னை ஷூட்டிங் அப்டேட்!

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை சினிமா தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். பொன்னியின் செல்வனுடன் அமர்ந்து பொன்னியின் செல்வனை (டிரெய்லர்) பார்ப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் தன்னுடைய அடுத்த பதிவில், "என்னுடைய முந்தைய ஸ்டோரியில் உள்ள காட்சிகள் சென்னையில் உள்ள திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் டிரெய்லரின் காட்சிகள்! நான் ஸ்பாய்லர்களை பகிர்கிறேன் என்று நினைக்கும் சிலர்   யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டிரெய்லரை பாருங்கள்" என ஆர்த்தி விளக்கமளித்துள்ளார்.

Also Read | 'VTK' படம் பார்த்துட்டு பிரபல நடிகர் போட்ட சூப்பர் ட்வீட்.. நெகிழ்ந்த சிம்பு..

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Jayam Ravi Wife Aarti Ravi about PS1 Trailer

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi Wife Aarti Ravi about PS1 Trailer, Ponniyin Selvan part 1, PS1 Trailer will find this news story useful.