JAYAM RAVI : அட.. நம்ம பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கு முதல் படம் ‘ஜெயம்’ இல்லையா? அவரே உடைத்த உண்மை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பழம்பெரும் எடிட்டர் மோகனின் மகனும், மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவின் சகோதரருமான ஜெயம் ரவி திரைத்துறையில் 25 திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

Advertising
>
Advertising

தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக, அந்த கதைக்குரிய முதன்மை கதாபாத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் ஜெயம் ரவி. அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.  இப்படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பலரும் பாராட்டி வருவதுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவிக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். 

இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, தனது முதல் படம் ஜெயம் திரைப்படம் அல்ல என்று குறிப்பிட்டார். ஆம், இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, “நான் நடித்த முதல் படம் ஒரு தொட்டில் சபதம்.. அப்பாவே (எடிட்டர் மோகன்) தயாரித்து எடுத்த படம் அது. அப்போது ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தேன்.  8 வயசு இருக்கும்.

அப்போது திடீரென ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு வரசொன்னார்கள். நான் சென்றதும்,  ‘பூவா தலையா போட்டு பார்த்துதான் யாரு பேட் பண்றதுனு முடிவு பண்ணனும்..’ என்கிற வசனத்தை கொடுத்து பேச சொல்லி நடிக்க சொன்னார்கள். அது ராம்கி திரைப்படம்.

அந்த படத்தில் இன்னொரு பையனையும் கமிட் பண்ணி, ராம்கி சாருடன் நடிக்க வைத்தார்கள். இருப்பினும் அந்த படத்தில் முழுமையாக என்னையே நடிக்க வைத்திருக்கலாம் என்று அப்பா இன்றுவரை சொல்லிக்கொண்டே இருப்பார்.” என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Jayam Ravi first film is not jayam here is answer

People looking for online information on Jayam Ravi, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Prakash Raj will find this news story useful.