கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப்பேரரசின் பொற்காலம் துவங்கும் காலக்கட்டத்தை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து திரைக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் இயக்குநர் மணிரத்னம், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல் விழாவில் கலந்துகொண்டு பேசிய இப்படத்தின் நடிகர் ஜெயம் ரவி, “நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் இதை மக்கள் எப்படி ஏற்பார்கள் என ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும் பேசிக்கொள்வோம். உங்கள் ரியாக்ஷன் மகிழ்ச்சியாக இருக்கிறது. உலக சினிமா நிறைய நானும் பார்த்திருக்கிறேன்.
நல்ல நடிப்புக்கு, டைரக்ஷனுக்கு, ஆக்ஷனுக்கு, நல்ல பாடலுக்கு கைத்தட்டுவார்கள். ஆனால் நல்ல ஒரு ஷாட்க்கு கைத்தட்டும் நம் தமிழ் மக்களின் சென்ஸ் ஆச்சரியம். படத்தின் ஒவ்வொரு ஷாட்டுமே கைத்தட்டுவதற்கு உரியதாக இருக்கும். நமக்கு பிடித்த மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பிருந்தா மாஸ்டர் இணைந்து உருவாக்கிய பாடல்கள்.. நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.
எங்களுக்கு அதிகாலையில் குதிரை ரைடு பயிற்சி இருக்கும். எனக்கு அவ்வளவாக வராது. பயமாக இருக்கும். கார்த்திதான் வா மச்சி என அழைத்து செல்வார். அவர் குதிரை ஏற்றத்துக்கு என உதவினார். நம்பிக்கை கொடுத்தார். அப்படி ஒரு நண்பன் கிடைப்பது கஷ்டம். ஆனால் ஒரு நாள் அவர் குதிரையில் இருந்த் கீழே விழுந்துவிட்டார் என தகவல் வந்தது,.. நான் உடனே ஆஹா நமக்கு ட்ரெய்னிங் கொடுத்த கார்த்தியே விழுந்துட்டார்னா என்ன பண்றது என நினைத்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் ஃபன் தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.