PONNIYIN SELVAN : "அத்தன பேரும் ஒரிஜினல் நகை போட்டு நடிச்சோம்".. 'பெரிய பழுவேட்டரையர்' சரத் சொன்ன காரணம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Ponniyin Selvan artists acted with original jewels sarathkumar
Advertising
>
Advertising

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.Ponniyin Selvan artists acted with original jewels sarathkumar

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சரத்குமார், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர், நடிகையர்  அனைவரும் ஒரிஜினல் நகைகளை அணிந்துகொண்டு நடித்ததாக பேசியுள்ளார்.  மிகப்பெரிய படம், நீண்ட நாள்கள், அதிக நேரம் ஷூட்டிங் இருக்கும்.. எனவே ஆபரணங்களால் அலர்ஜி உண்டாகலாம் என்பதால், அனைவருக்கும் தங்கம் என்றால் தங்கம், வைரம் என்றால் வைரம், ரூபி என்றால் ரூபி என ஒரிஜினல் ஆபரணங்களையே இப்படத்தில் நடிகர்கள் அணிந்து நடித்ததாக இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan artists acted with original jewels sarathkumar

People looking for online information on Aishwarya rai, Lyca Productions, Madras Talkies, Mani Ratnam, Ponniyin Selvan part 1, Sarathkumar, Trisha will find this news story useful.