பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
![Ponniyin Selvan actress Sobhita Dhulipala about working with tamil directors Ponniyin Selvan actress Sobhita Dhulipala about working with tamil directors](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ponniyin-selvan-actress-sobhita-dhulipala-about-working-with-tamil-directors-new-home-mob-index.jpeg)
Also Read | பொங்கலுக்கு ரிலீஸாகும் சிரஞ்சீவியின் புதிய படம்.. BTS போட்டோவுடன் வெளிவந்த ஷூட்டிங் அப்டேட்!
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான இசை & டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து பிரபல OTT நிறுவனமான டென்ட்கொட்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்நிகழ்வில் ஒரு ரசிகர், "தமிழ் சினிமாவில் எந்த இயக்குனருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்" என கேட்ட கேள்விக்கு நடிகை ஷோபிதா துலிபாலா, "வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தியாகராஜன் குமாரராஜா" என பதில் அளித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வானதி கதாபாத்திரம், கொடும்பாளூர் இளவரசி ஆவார். குந்தவை நாச்சியாரின் தோழியும், அருள் மொழி வர்மனின் காதலியாகவும் வருபவர்.
ஷோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப்பின் த்ரில்லர் படமான ராமன் ராகவ் 2.0 (2016) இல் துலிபாலா அறிமுகமானார், மேலும் அவர் தெலுங்கு படங்களான கூடாச்சாரி (2018) மற்றும் மேஜர் (2022) மற்றும் மலையாளத் திரைப்படங்களான மூத்தோன் (2019) குருப் (2021) படத்திலும் நடித்துள்ளார்.
Also Read | "ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சு".. மனம் திறந்த Ponniyin Selvan பட நடிகை!