அட.. பிரபல தமிழ்நாட்டு கோயிலில் பொன்னியின் செல்வன் 'பூங்குழலி' சாமி தரிசனம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தியேட்டரில் பட்டையை கிளப்பிய பொன்னியின் செல்வன்.. PS1 படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி நடித்துள்ளார். கோடியக்கரை படகோட்டி பெண்ணான பூங்குழலி,  வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து செல்லும் கதாபாத்திரம் இது. பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனிடம் காதல் கொள்வது போலவும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா லெஷ்மி பகிர்ந்துள்ளார்.

மிகப்பெரிய பழமையான இந்த கோவில் குடைவறைக்கோவில் ஆகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா லெஷ்மி, தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங் ஆஃப் கொத்த'  KOK' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் மதுரை, காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஐஸ்வர்யா லெஷ்மி கலந்து கொண்டார்.

Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... திருப்பதியில் தரிசனம் .. பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Actress Aishwarya Lekshmi Visited Pillaiyarpatti Karpaga Vinayagar Temple

People looking for online information on Aishwarya Lekshmi, Pillaiyarpatti Karpaga Vinayagar Temple, Ponniyin Selvan Actress Aishwarya Lekshmi will find this news story useful.