பொன்னியின் செல்வன்-1 படத்தின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Also Read | போடு... 'ஜெயிலர்' படப்பிடிப்பில் நம்ம 'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணன்.. வைரல் BTS வீடியோ!
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். இது வரை தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படம் பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளிவந்து 50 வது நாளை முன்னிட்டு நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படம், உலகளவில் 500 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என அதிகாரப்பூர்வ போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
Also Read | நயன்தாராவின் பிறந்தநாள்.. Unseen போட்டோக்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறிய வாழ்த்து!