RIP BAMBA BAKYA: "மாபெரும் இழப்பு" - பாடகர் பம்பா பாக்யா மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் பாடகர் பம்பா பாக்யா (எ) பாக்யராஜ் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம், பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49.

Advertising
>
Advertising

Also Read | உலகின் விலையுயர்ந்த சொகுசு காரில் மாஸாக நடிகர் சிம்பு.. 'VTK' படத்தின் புதிய போஸ்டர்!

இந்திய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ராவணன் திரைப்படத்தில் இருந்தே பாடிவந்த பாடகர் பம்பா பாக்யா. இவர் பின்னர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எந்திரன் 2.0 படத்தில் வரும் புள்ளினங்காள் பாடல், சர்வம் தாள மயம் படத்தில் வரும் பாடல்கள் என பல பாடல்களை பாடிய இவர்,  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலமே காலமே' என்கிற உருக்கமான பாடலை பாடியிருப்பார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வரலாற்று புனைவு திரைப்படமான, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகின.

அதில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய பொன்னி நதி பாடலில் வரும் தொடக்க வரிகளை பம்பா பாக்யா தான் முதலில் பாடியிருப்பார். அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரிஹானா மற்றும் அவரை தொடர்ந்து முதன்மை பாடகராக அந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இருப்பார். இது தவிர இன்னொரு பாடலையும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடியிருக்கிறார் பம்பா பாக்யா.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென சென்னையில் நேற்று நள்ளிரவு மரணம் அடைந்த பம்பா பாக்யாவின் மறைவு குறித்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி, தமது ட்வீட்டில்,  “பாடகர் பம்பா பாக்யாவின் திடீர் மரணம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் இழப்பை தாங்கும் வலிமையை அவருடைய குடும்பத்திற்கு கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்!” என குறிப்பிட்டு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Also Read | Chess Olympiad: பிரபல நட்சத்திர விடுதியில் பாராட்டு விழா..ஒரே மேடையில் CM ஸ்டாலின் - கமல் - உதயநிதி!

தொடர்புடைய இணைப்புகள்

Ponni Nadhi Singer Bamba Bakya dies Actor Karthi condolence

People looking for online information on Bamba Bakya, Maniratnam, Ponni Nadhi Song, Ponniyin Selvan 1, Ponniyin Selvan part 1, PS-1, RIP Bamba Bakya will find this news story useful.