கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர் நடிகரும் மாடலுமான தர்ஷன். அவருக்கு நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். மேலும் பட வாய்ப்பு அளிக்க போவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், அவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை சனம் செட்டி அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

அதாவது நடிகர் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டிக்கு 2019-ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஜூன் மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தர்ஷன் திருமணத்தை நிறுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது 15 லட்சத்திற்கு மேல் தான் அவருக்காக செலவு செய்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பின்பு ஏமாற்றி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த நீதிமன்றம் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் பிக் பாஸ் தர்ஷன் மீது 294(பி)- ஆபாசமாக பேசுதல், 506-மிரட்டல், 420- மோசடி, 354- பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.