கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல Youtuber டிடிஎஃப் வாசன்.
Also Read | செம..தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்! இவரா?
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின. டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
அதேபோல் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Gp முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.
GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் யூடியூபர் வாசன் 150 கிமீ வேகத்தில் ஜி.பி. முத்துவை பின்னால் அமர வைத்து பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து கோவை போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 14ம் தேதி டிடிஃப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read | 'Vikram' படத்துக்காக லோகேஷ் போட்டு வெச்ச Plan.. "ஆனா அது படத்துல நடக்கல".. Karthik Subbaraj ஷேரிங்ஸ்!!