இந்த கொரோனா வந்தாலும் வந்தது. இந்த வருடம் ஐபிஎல், பிக்பாஸ் எல்லாம் தள்ளிப்போய் விட்டது. போதாதற்கு தீபாவளி போன்ற பண்டிகைகளை கூட பயந்து கொண்டே கொண்டாட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இந்த பிரச்சினை எல்லாம் இல்லை. இனிப்பு, பட்டாசுகள், புத்தாடை என அனைத்தையும் அவர்கள் அலைந்து, திரிந்து பர்சேஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்லாமல் பிக்பாஸ் அனுப்பி வைத்து விட்டார்.
பத்தாதற்கு விதவிதமாக சமைத்தும் அனுப்பி விட்டார். (இதெல்லாம் ரசிகர்களின் கருத்துக்கள் தான்) இதைப்பார்த்த ரசிகர்கள் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளை போட்டியாளர்கள் உள்ளே கொண்டாடுவதை குறை சொல்ல முடியாது. ஆனால் கொஞ்சமாவது டாஸ்க் கொடுக்கலாம். எப்போ பார்த்தாலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இல்லை எனில் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இதே கடைசியாய் இருக்கட்டும் பிக்பாஸ்.
தயவுசெய்து இனிமேலாவது டாஸ்க்குகளை அதிகம் கொடுங்கள் என கிண்டலடித்து வருகின்றனர். வேறு சிலரோ நல்ல வேளை ஆயுதபூஜை போல 4 மணி நேரம் எல்லாம் போடவில்லை என ஆறுதல் அடைந்துள்ளனர். இதுக்கே இப்படின்னா இன்னும் கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் பண்டிகை எல்லாம் வருதே பிக்பாஸ் என்ன பண்ண காத்து இருக்காரோ? என வேறு சில ரசிகர்கள் பீதியடைந்து இருக்கின்றனர். இத்தோட முடிச்சுக்கலாம் இனியாவது உருப்படியா டாஸ்க் கொடுங்க பாஸ்? என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.