நேற்று பாலாஜி, ரம்யா, கேப்ரியலா மூவரையும் அழைத்து பிக்பாஸ் நலம் விசாரித்தார். இதில் ரம்யா மட்டும் அழாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் கடுப்பான பிக்பாஸ் அவரை வறுத்தெடுத்து வெளியில் அனுப்பினார். ஆனாலும் கொஞ்சம் கூட அசராமல் அப்போதும் புன்னகையை சிந்தியபடி தான் வெளியில் வந்தார். கேப்ரியலாவுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிய அவர் நெக்ஸ்ட் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த பாலாஜியை அழைத்து பேசினார்.
பாலாஜி இயல்பாக பேசினாலும் கூட சற்று நேரத்தில் கண்ணீர் சிந்தி விட்டார். இதைப்பார்த்த பாலாஜி ரொம்ப யோசிக்காதீங்க. டாஸ்க்ல எப்படி புதுசா, புதுசா யோசிச்சு வெளையாடுறீங்க அதுபோல வீட்லயும் செய்யுங்க. உங்க பழைய ஆட்டத்தை நான் பார்க்கணும் என பாலாஜிக்கு அட்வைஸ் கூறினார். இதைக்கேட்ட பாலாஜி சரி பாஸ் இனிமே உங்க ஆசைப்படியே விளையாடுறேன் என அவருக்கு பதில் அளித்தார்.
மேலும் ஷிவானியை நீங்க ஷிவுன்னு கூப்ட்டீங்க என்ன அதுபோல நீங்க தம்பின்னு கூப்பிடுங்க. நீங்க இனிமே என் அண்ணன் என அன்பு கட்டளையிட சரி தம்பி என பாலாஜியின் ஆசையை பிக்பாஸ் நிறைவேற்றினார். இதனால் பாலாஜியின் பழைய ஆட்டம் மீண்டும் வெளிப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஷிவானியை ஷிவு, கேபியை பிக்பாஸின் கேபி, ஆரியை சிஷ்யா, அனிதாவை கண்ணுக்குட்டி, பாலாஜியை தம்பி, ஆஜீத்தை ஆஜூ என பிக்பாஸ் அழைக்க ஆரம்பித்து இருக்கிறார்.