நடிகர் விவேக் சின்னக் கலைவாணர் என தமிழ்த் திரையுலகில் அறியப்படுபவர்.
திரையுலகில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை காட்சிகளில் நடித்த நடிகர் விவேக் முன்னணி நடிகர்களுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்துள்ளார்.
இவர் கடந்த 2021, ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று மரணம் அடைந்தார். இந்நிலையில் நடிகர் விவேக்கை கவுதம் மேனன் இயக்குவதாக இருந்ததாக தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
மிர்ச்சி சிவா மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ சின்னக் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கும் “LOL: எங்க சிரி பாப்போம்” என்கிற காமெடி ரியாலிட்டி சீரிஸ் சென்ற ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுபற்றிய தமது நினைவலை ஒன்றை தம் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள கவுதம் மேனன், “விவேக்குடன் டிஜிட்டல் ரிலீஸ்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்று பேசினோம். ஆனால் ஓடிடி தளத்தில் அவர் முதல் முதலில் பணியாற்றியுள்ள ‘LOL-எங்க சிரி பாப்போம்’ ஷோவின் வெளியீட்டுக்காக காத்திருக்க வேண்டும் என விவேக் அப்போது கூறியிருந்தார். அதுதான் எங்கள் கடைசி உரையாடல்.
இப்போது அந்நிகழ்ச்சியில் விவேக்கை பார்க்கும்போது அந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. என்ன ஒரு fun ஆன நிகழ்ச்சி. இதோ சொக்கு & ரிவால்வர் ரிச்சர்டு” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கவுதம் மேனன், சூர்யா நடிப்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் தயாரிப்பில் அண்மையில் உருவாகி நெட்ஃபிளிக்ஸில் வெளியான நவரசா ஆந்தாலஜி தொகுப்பில், ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார்.
இதேபோல் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: கார்த்திக்கு ஜோடியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்! இண்டஸ்ட்ரியை கலக்கும் வேறலெவல் போஸ்டர்!