கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய் தமிழ் திரைப் படங்களில் வெகுவாக நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழுபவர்.
எனினும் பியா பாஜ்பாய் தமிழ் ரசிகர்களிடையே மறக்கமுடியாத ஒருவராகவே என்னும் நிலை நிற்கிறார். கோவா படத்தில் இதுவரை இல்லாத உணர்விது பாடலில் பியா நடித்திருப்பதை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். இந்த நிலையில் பியா பாஜ்பாய் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் சோக செய்தி அனைவரையும் உலுக்கி இருக்கிறது.
அது என்னவென்றால் தமது ட்விட்டர் பக்கத்தில் தம்முடைய சகோதரர் மறைந்து விட்டதாக பியா பாஜ்பாய் மிகவும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார், இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு ட்விட்டரில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலரும் இதனை இதயம் நொறுங்கக் கூடிய செய்தி என்று குறிப்பிட்டதோடு பியா பாஜ்பாய்க்கு தொடர்ச்சியாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகை பியா பாஜ்பாய் ஜீவாவுடன் இணைந்து கோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில்தான் மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். இதனைத் தொடர்ந்து பியா பாஜ்பாயின் சகோதரர் காலமாகி இருக்கும் சம்பவம் அவரைப் பொறுத்தவரை இரட்டை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.